Sunday 22 April 2018

பிரமலைக்கள்ளர்கள் மலையமான் திருமுடிக்காரி மரபினரே பிரமலைக்கள்ளர்கள் 'மழவராயர்' மரபினரே

(திருப்பரங்குன்றம் கோயில் பரம்பரை அறங்காவலரான மழவராய மரபினர்.திருப்பரங்குன்றம் கோயில் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள 'மழவராயர்' என்போர் பிரமலைக்கள்ளர் மரபினரே.)


 மறைக்கப்பட்டதனால்,மறக்கப்பட்டதனால் திருடப்படும் வரலாறுகளின் வெளிச்சம் இதுவே.திருப்பரங்குன்றம் கோயிலின் முதல் மரியாதைக்குரியவர்கள் இவர்களே.மழவராயர் மரபினரே பிரமலைக்கள்ளர்கள். 



பிரமலைக் கள்ளர்கள் முன்னாள் மதுரை மாவட்டத்திலும் புதியதான தேனி மாவட்டத்திலும் மிகையாக வாழ்கின்றனர். கள்ளர்கள் விவசாயப் பிரிவினர் அல்லர், காவல் மற்றும் களவுத் தொழிலினை செய்து வந்தவர்கள். சமவெளிப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் என்றே இவர்கள் வரையறுக்கப்படுகிறார்கள். கடந்த இரு நூற்றாண்டாக பரவி வந்த இந்து மயமாக்கலுக்கு உட்படாத இனக்குழுவாக இவர்கள் இருந்து வந்துள்ளதை மதுரையின் வரலாற்றை எழுதிய என்.கெச்.நெல்சன் போன்றவர்களும் மற்ற பல ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். 

பிரமலைக்கள்ளர்கள் யார்? 

பிரமலைக்கள்ளர்கள் பற்றி பல வரலாற்று ஆய்வாளர்கள் இவர்கள் எந்த மரபினர்கள் என்று ஆராய்ந்து வருகின்றனர்.அதிலும் மிக பழமையான தொல்குடியினரான ஆப்ரிக்க மக்களின் ஜீன்களான எம்-130 ரக ஜீன்கள் பிரமலைக்கள்ளர் இனத்தவரான விருமாண்டித்தேவரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவர்கள் எந்த மரபினர் என்று பலருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில் இவர்கள் யார் என கல்வெட்டு தரவுகள் மூலம் நிருபிக்க இயல்கின்றது.

கள்ளர் பெயரின் நிஜ அர்த்தம் என்ன? 

கள்ளர் என்றால் திருடர்,கரியர்,அரசன் என பல பொருள் தந்தாலும் இந்த திருடன் என்று எந்த இனக்குழுவாவது பெயர் வைத்து கொள்ளுமா எனவே கள்ளர் என்ற பெயரின் நிஜ அர்த்தத்தை இங்கு காண்போம்.
கள்ளர் என்ற பெயர் 'கோவலர்'(மழவர்) என்ற பெயரின் திரிபே
திருக்கோவிலூரைச் சங்க இலக்கியம் 'கோவல்' என்று கூறும்.
கோவலர்----->கோளவர்------->களவர்------->கள்வர்.இப்படி கோவலர் என்ற குடியினரின் திரிபே கள்வர் என்ற குடியினர் ஆவர்.

TDr. Oppert The original home of the Kallars appears to have been Thondamandalam or the Pallava country, and the head of the class, the Raja of Pudukota, is to this day called the Thondaiman. There are good grounds for believing that the Kallars are a branch of the shepherds , who, when they found their regular occupation as soldiers People who suffer most at the hands of the Kallars are the shepherds . Their sheep and goats form a convenient subject for the Kallar's raids. They are taken for kaval fees alleged to be overdue, and also stolen, again to be restored on the payment of blackmail. The anti-Kallar movement was started by a man of the shepherd caste, and rapidly spread. Meetings of villagers were held, at which thousands attended.
('Kallar'-Edgar Thurston. Castes and tribes of southern India)


ஏறுதழுவுதல் கோவலரிடமே இருந்துள்ளது.எனவே சங்க இலக்கியம் கூறும் ஏறு தழுவும் புரிந்த கோவலர் இனமே கள்ளர் இனமாகுமே தவிர கள்ளர் என்போர் களப்பிரர் அல்ல.

A poet of the early years of the present era, quoted by Mr. Kanakasabhai Pillai, describes this custom as practiced by the shepherd castes in those days.
 " A large area of ground is enclosed with palisades and strong fences. Into the enclosure are brought ferocious bulls with sharpened horns. On a spacious loft, over- looking the enclosure, stand the shepherd girls, whom they intend to give away in marriage. The shepherd youths, prepared for the fight, first pray to their gods, whose images are placed under old banian or peepul trees, or at watering places. They then deck themselves with garlands made of the bright red flowers of the kanthal, and the purple flowers of the kaya. At a signal given by the beating of drums, the youths leap into the enclosure, and try to seize the bulls, which, frightened by the noise of the drums, are now ready to charge anyone who approaches them. Each youth approaches a bull, which he chooses to captur .('Kallar'-Edgar Thurston. Castes and tribes of southern India)

'ஸ்ரீ கோவலர்' = 'திரு கோவலர்' = திருக்கோவலர் + ஊர் =திருக்கோவிலூர் என்று அறியப்படும் 'கோவல் கோமான்' மலையமான் திருமுடிக்காரி என்று அறியப்படுகின்றார்.

கோவலர்=கோபாலர் என்போர் மேல்நிலையில் உள்ள போர்க்குடியாக இருத்தல் வேண்டும். கோவலர் என்றால் கோத்தொழில் செய்வோர் என்று பொருள் உண்டு. கோத்தொழில் என்றால் 'அரச வினை' என்கிறார் நாட்டார். அதாவது அரசனின் ஏவல்களைச் செய்பவன். செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்! ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!
 போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத்தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! பசுக்களைக் காக்கும் முல்லை நில மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலன் என்ற பெயரும் இங்கிருந்தே தோன்றியது தான்! கோவலன் = கோபாலன் = கண்ணன்!
மலையமான் ஆநிரை கள்வன்.அவ்வாறு கவர்ந்ததை பாதுகாத்து கோவலர் குடியாயினர் போலும்.
கோவலர் ஆநிரை கவர்வதில் வல்லவர் ஆதலால் கள்ளர் என பெயர் பெற்றனர்.
கள்வர் என்பது 'கள்ளர்' என்பது பொருள் அல்ல அது கோவலர் என்பதன் திரிபான கள்வர் என்பது தான் சரியான பொருளாகும்.மலையமான் எப்படி முள்ளூர் மலையை ஆண்டானோ அது போலத்தான்.'புல்லி' என்பவன் திருமலை என்ற திருப்பதியை ஆண்டான் 'கள்வர் கோமான் புல்லி' என்ற கள்ளர் தலைவன் ஆண்டான்.
.இன்றைக்கும் கள்ளர் குல மக்கள் தங்கள் மூதாதையராக(பாரி,மலையமான்,பேகன்,புல்லி,அதியமான்) போன்ற பட்டங்களோடு தஞ்சைப் பகுதியில் காணப்படுவதும் நிஜமே.இவ்வாறு "மாலே மணிவண்ணா ,உள்ளம் கவர் கள்வன் கோவல மைந்தனே".என்கிறது இலக்கியம்.எனவே கோவலன் என்னும் உள்ளம் கவர் கள்வனே அன்றி அவன் கள்ளன் அல்ல.[ஆபீர்ஸ்/ஸ்ரீஆயர் என்று அழைக்கபடும் வட-இந்திய துவாரகை-கிருஷ்ணனைக் குலத் தலைவனாக கொண்ட தென்-இந்திய சத்திரியர்கள் தான் இந்த 'ஸ்ரீ கோவலர்'.
இவர்களுள் சந்திர,சூரிய குலம் என்றாலும் குருவின் பெயரால் குரு குல க்ஷத்ரியர்-பார்க்கவர் என அழைக்கப்படுவர். பார்க்கவ குலம்=கோவலர் குலம். 
 பார்க்கவ குலம் என்ற இவர்களை பண்பு பெயரில் 'மழவர்' என்று அழைப்பதும்."மழவர் = மலைநாட்டின் வீரர்" என்பதும் உண்மையே.'மழவர்' என்ற காரணப்பெயர் மலையுடைய நாட்டின் வேளிரைத்தான் குறிகின்றதென்பது இங்கு நிதர்சனமான உண்மை.
நாராயணப் பேரரசு மக்கள் கள்ளர் படைத்தலைவர்

பெருவயல் செப்பேட்டில் ஒப்பம் இட்டிட்ருக்கும் ஒவ்வொரு கள்ளர் குல நாட்டர்கள் தங்களை நாராயணப்பேரரசு வழிவந்த கள்ளர் படைத்தலைவர்கள் என கூறியுள்ளனர்

'சீயான்' பெயரின் விளக்கம் என்ன? 
பிரமலைக்கள்ளர்களில் 'தாத்தா' அல்லது குடும்ப பெரியவர்களை 'சீயான் என அழைக்கும் வழக்கம் உள்ளது. இதன் அர்த்தம் என்ன என்று பலருக்கும் தெரியாது.
அதாவது மழவராகிய கோவலரை 'ஸ்ரீ ஆயர்' என அழைக்கும் வழக்கம் இருந்தது.'ஸ்ரீ' என்பது தமிழில் 'திரு' (அல்லது) 'சீ' என கூறுவோம்.
திருக்கோவலர்=='ஸ்ரீ ஆயர்'

'ஸ்ரீ ஆயர்'------>'சீ ஆயர்'------>சிய்யான்------>சீயான்.

இவ்வாறு 'ஸ்ரீ ஆயர்' என்ற பெயரின் திரிபே 'சீயான்' என மாறியுள்ளது.இந்த பெயரைத்தான் 'சியான்' என பிரமலைக்கள்ளர்கள் பயன்படுத்துகின்றனர்.
 

மலைக்கோவலர்----->மலைக்கள்ளர்கள்= 'மழவர்' என்ற மரபினரே 

மேலும் மழவர் என்றால் யார் என்று டாக்டர்.ராஜ மாணிக்கம் பிள்ளை 1944ம் ஆண்டு பதிப்பித்த பல்லவர் வரலாறு என்னும் நூலில் பக்கம் 95ல் மழவர் என்பவர் மலைநாட்டினர்,இவர்கள் மலாடர் என்று கூறப்படுபவர்கள். திருக்கோவிலூர் போன்ற மலைப்பகுதிகளில் வாழ்ந்தார்கள். மெய்ப்பொருள் நாயனார் மலாடர் (மழவர்)அரசர் ஆவார் என்று தெளிவாகவே விளக்கியுள்ளார். மேலும் சதாசிவ பண்டாரத்தார் கூட அதியர் மரபையும்,மழவராயர் மரபையும் மலாடு நாடு மலையர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார். மழவர் என்பவர்களின் சின்னம் வில் ஆகும்.சேரர்களின் சின்னமும் வில் ஆகும்.கொங்குப் பகுதியை ஆண்ட சேர வம்சத்தைச் சேர்ந்தவர்களை மலையமான் வம்சம் என்றும் பார்க்கவ குலம் என்றும் அறிகின்றோம். Tradition traces the descent of the malaiyamaans from a certain Deva Raja, a Chera king, who had three wives, by each of whom he had a son, and these were the ancestors of the three castes. There are other stories, but all agree in ascribing the origin of the castes to a single progenitor of the Chera dynasty. It seems probable that they are descendants of the Vedar soldiers of the Kongu country, who were induced to settle in the eastern districts of the Chera kingdom.-udayans- Edgar Thurston. Castes and tribes of southern India (Volume 7) மலையமான்களாகிய பார்க்கவ வம்சத்தாரை சேர வேட்டுவ வீரர்கள் என்கிறார் எட்கர் தர்ஸ்டன்.குறிஞ்சி நிலத்து மழவர்களாகிய இவர்களே முல்லை நிலத்திலும் ஆநிரை கவரவும் ஆநிரை மீட்கவும்,எல்லைகளை காக்கவும் என்று மறத்தொழில் புரிந்துள்ளனர்.அதன் பொருட்டு கோவலர் கோ காவலர் ஆகினர். மழவர் எனப்படும் குறிஞ்சி நில வேட்டுவ மறவர்கள் முல்லை நிலத்தில் இடையர் ஆகவும் மாற முடியும்.ஏனெனில் மழவர்கள் மலையாடுகளை வளர்ப்பார்கள் என்ற தகவல்களையும் அறிய முடிகிறது. படைத்தொழிலும்,ஆநிரை கவர்தலுமே மழவர்களின் குலத்தொழில். எனவே ஆதி மழவர்களே மலைக்கோவலராகி பின்பு பிரமலைக்கள்ளர்களாகியுள்ளனர். 

திருப்பரங்குன்றம் கல்வெட்டுகளில் திசைக்காவல்-'மழவராயர்' பிரமலைக் கள்ளர் மரபினரே. 

திருப்பரங்குன்றத்தில் 13-ஆம் நூற்றாண்டு சுந்தரப்பாண்டியத்தேவன் கல்வெட்டுகளில் ஒருபாடிக்காப்போன் மழவராயர் என்பவரைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் மழவராயர் ஒருவர் திருப்பரங்குன்றம் கோயிலின் பாடிக்காப்பாளன் என குறிப்பிடப்பட்டுள்ளார்.இதைப்பற்றிய கல்வெட்டு செய்தி இதுவே. 

இக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் பாண்டியன் மாறஞ்சடையன் ,சோனாடு கொண்ட சுந்தர பாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கருவறை மேல்நிலையிலுள்ள கிரந்த எழுத்துக் கல்வெட்டில் கலி ஆண்டு 3874 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. வட்டெழுத்துக் கல்வெட்டில் "சாத்தன் கணபதி திருத்துவித்தது திருக்கோயிலும், சிறீ தடாகமும்" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது (அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் தல வரலாறு, ப.22 ). திருப்பரங்குன்றத்து தென்பாகத்தின் உட்பாகத்தில் உள்ள சுந்தர பாண்டிய ஈசுவர முடையாருக்கு வேண்டும் நிலபந்தங்களுக்கும், திருப்பணிகளுக்கும், வீரநாராயணக் குளக்கீழ் புளியங்குன்றூர் ஆன சுந்தர பாண்டிய புத்துக் கண்டுழவான ஒரு பக்கமுடைய மலைக்குடி கோலால் பெரும் பூவும், குருவையும் விளையும் நிலத்திலே ஆறு மாவும் ஆக, அரையே இரண்டு மாவை 
மழவராயனுடைய 
வேண்டுகோளின்படி அளித்துள்ளதையும், திருபுவனச் சக்கரவர்த்தி குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டு குறிக்கிறது. 'மழவர்' என்பது மலைக்கோவலராகியபிரமலைக்கள்ளரைக் குறிக்கும் பெயர் என்பது மீண்டும் இவ்விடத்து நினைத்தற்குரியதாகும்.

திருமலை நாயக்கர் காலத்திலும் திருப்பரங்குன்றம் கோயிலின் அறங்காவலர் உரிமை 'காரி பின்னத்தேவன்' என்பவருக்கு 'திருமலைக்காரி பின்னத்தேவன் என பட்டம்கட்டி அவருக்கே உரிமையும் செப்புப்பட்டயமும் தரப்பட்டுள்ளது.
காரி பின்னத்தேவன் மலையமான் திருமுடிக்காரியின் மரபினரே: 

எனவே காரி பின்னத்தேவன் என்பவர் திருக்கோவிலூர் மலையமான்.திருமுடிக்காரியின் மரபில் பின் வந்தவன் என்று பொருள் கொள்கிறார்.இவர்களுக்கு முற்காலத்தில் மழவராயர் என்று பட்டம் இருந்துள்ளது.மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான மலையமான் குலத்தார் மட்டுமே.மலையமான் குலத்தோர் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த அரச குடும்பத்தார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி, "பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்" என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி. இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார்.

என்வே முற்காலத்தில் மழவர்(மலையமான்கள்) என்றும் பிற்காலத்தில் பார்க்கவகுலம், தஞ்சைக்கள்ளர், பிரமலைக்கள்ளர் என வேறு வேறு பெயரில் அறியப்படும் மரபினர்களே கள்ளர்கள். 




இன்றைக்கும் சிய்யான்(ஸ்ரீஆயன்) என்ற சொல் வழக்கும் மாயாண்டி,மலைச்சாமி(மலையமான்) போன்ற பெயர்கள் பிரமலைக்கள்ளர் மரபுப் பெயராய்க் காணலாம். இவர்களைத்தான் திருப்பரங்குன்றம் கோயில் கல்வெட்டு மழவராயர் என குறிப்பிடுகின்றது. எனவே பிரமலைக்கள்ளர்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் பாண்டியனால் பாடிக்காப்போனாக நியமிக்கப்பட்ட 'மழவராயர்' என்ற சீர்மிகு மலையமான் வம்சத்தினரே.

3 comments:

  1. நான்"மலையமான்தான்" அருன் pls call this number9952747591

    ReplyDelete
  2. எங்களின் பட்டப்பெயர் மழவராயர்..... (கள்ளர்)

    ReplyDelete
  3. முல்லை நில மறவர்களா 🤣🤣🤣🤣 வரலாறு திருடர்கள்... இத மட்டும் சீமான் அண்ணா பாத்தாரு அவ்ளோதான் 🤣🤣🤣🤣

    ReplyDelete