Monday 23 April 2018

தேவரினம்

முக்குலத்தோரின் கடவுள்: 


முக்குலத்தோரின் முழு முதற் கடவுள் முருகன். இது தவிர அய்யனார் , சுடலைமாடன், கருப்பசுவாமி மற்றும் பல குல தெய்வங்களும் அடங்கும்.

முக்குலதவர்கள் கடவுளை தவிர வேறு எவருக்கும் அடி பணிய மாட்டார்கள். அன்பாக பண்புடன்  நடந்து கொள்பவர்களுக்கு தலை தலைவணக்குவர்கள் .  மற்றபடி   அடிக்கு அடி உதவுகிராற்போல் ! அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் !  ! அடிக்கிற அடியில் அம்மியும் தானாக நகரும் !  முக்குலத்து  வீர முன்னோர்களுக்கு சொன்ன பழமொழி,   அதர்கேற்ப, அரசனும் தேவனே ,ஜமீன்தார்களும் தேவனே ! நிலக்கிழார்களும் தேவனே ! கையில் தடி புறம்பு எடுத்து கொண்டு சென்றால் பணியாளன் தானாக பறந்து அண்ணன் தம்பி உதவி இல்லாமல் முதலாளிக்கு செய்து முடிப்பான் வேலைக்காரன் , தடியை பார்த்தால் அம்மியை தானாக வைக்கவேண்டிய இடத்தில் வைத்து விட்டு செல்வான் , தேவன் அடிக்கு அத்தனையும் அடி பணிந்து கிடந்தது ...எல்லாம் தேவனே ! எங்கும் தேவனே ! என்ற பழமொழியிலும் இனிமை உண்டு தேவர் இனத்துக்கு மட்டுமே

சங்ககாலத்தில்  சேர, சோழ , பாண்டிய மன்னர்களின் சாம்ராஜ்யம். கண்டம் விட்டு கண்டம் பரவி இர்ருந்தது.

தேவர்களின்  பிறப்பிடம் : குமரி கண்டம் 

தேவர்கள் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். சில காலங்களுக்கு முன் வெளியிடப்பட்ட திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்களும் , தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” நூல்களும் இதை உறுதிபடுத்துகிறது. தேவர்கள் தோன்றிய இடம் குமரிக்கண்டம் தான், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழி தான். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தேவர்கள், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன் கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன். வடமொழி நூலான 'நைஷதம்' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த ..இவன் வெற்றிவேற்கை எனும் தமிழ் நூலையும் எழுதி உள்ளன்.
வெற்றிவேற்கை எனும் தமிழ் நூல் நீதி நூல் ...அதில் நீதி மட்டும் போதிக்காமல் ஒரு சரித்திர உண்மையையும் கூறி உள்ளார் . அதை காண்போம் .
''இருவர் தம்  சொல்லையும் எழுதரம்  கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின் 
மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர்  தம் 
மணமுற மருகி நின்று அழுத கண்ணீர் 
முறையுறத் தேவர் மூவர் காக்கினும் 
வழி வழி ஈர்வதோர் வாள் ஒக்கும்மே.''

பொருள் :வழக்கு தொடுத்தவர் அதனை  மறுப்பவர் இருவர் கூற்றையும்  எழு முறை கேட்டு அவை பொருந்த வராமல் நீதி முறையாக கிடைக்க வில்லையானால் வழக்கை இழந்தவர் அறம் பிறழா மனதுடன் நின்று அழுத கண்ணீர் அறமுறை பிழையாது நீதி வழங்கும் ஆற்றல் மிக்க தேவர் மூவர் { சேர , சோழ ,பாண்டியர் } காக்கினும் . அந்த கண்ணீருக்கு காரணமானவர் வழி வழி தோன்றும் வாரிசுகளையும் அழிக்கும் வாளாகும்..

இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார்.
அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால்
மூவரசரும்  தேவர்  அதாவது முக்குலதோர் என்று  வாக்குமூலம் கொடுத்துள்ளார் .

இதில்  முறையுறத் தேவர் மூவர் என்பதில் பொதுவாக முப்பெரும் தேவர் என சிவன் ,திருமால் , பிரமன் இவர்களை குறிக்கும் ...

மூவர் என்பது தமிழில் பொதுவாக சேர , சோழ ,பாண்டியரை குறிக்கும் . ஆனால் இதில் முறையுற என்பதை கவனிக்க வேண்டும் . அதாவது நீதி நெறி வழுவாமல் காப்பாற்றுவது அரசர்களை குறிக்கும் ...

எடுத்துக்காட்டாக

"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறை என்று வைக்கப்படும் ."
எனும் திருக்குறள் வாயிலாக அறியலாம் .

முக்குலத்தோர் மொழி :தமிழ் 

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000

குமரிக்கண்டமுLம் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் முக்குலதோர் எனப்படும் தேவர்களே!

குமரிக்கண்டம்  எனும்  பெரும் பகுதி பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தேவனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.

நான்கு பெருங் கடல் கோள்கள்

1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.
சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.

தொல்காப்பியம்

அருண்மொழித்தேவர் (தொல்காப்பியர்):

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.

மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்

1. பழந்தமிழ் (Ancient Tamil)

உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil
ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil
இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil

2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)

உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil
ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil
இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil

3. தற்காலத் தமிழ் (Modern Tamil)

உட்பிரிவுகள் மூன்று.
அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil
ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil
முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ் ( Early ancient Tamil (or) Proto Ancient Tamil )
திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.
திராவிட மொழிக் குடும்பம்,மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.
2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.
3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.

தமிழ்மொழியின் பெரும்புகழ் திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.

இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.

சங்ககாலத்திற்கு பிறகு சேர, சோழ , பாண்டிய மன்னர்களின் சாம்ராஜ்யம் 

1100 வருட பழமையான ஹிந்து கோவில் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கபட்டது. இது ராஜ ராஜ தேவரின் மகனால் கட்டப்பட்டது.


தாய்லாந்தில் பாழடைந்து கிடக்கும் சோழர்களால் கட்டப்பட்ட பழங்கால இந்து ஆலயம்.கட்டப்பட்டது.


கொங்கு

கொங்கு என்றால் தேவர்கள் தேன் சொறிந்த நாடு என பொருள். தலை சிறந்த தமிழகத்தில் சேர,சோழ,பாண்டியர் எனும் உற்ற சகோதரர்கள் ஆட்சியில் சமதர்மம் , ஜனநாயகம், சன்மார்கம் யாவும் தலைத்தோங்கி நின்ற காலத்தில் ஒரே குலம் ஒருவனே தேவன் என உலகை படைத்த பார்வதி பரமசிவன் நாமம் பாடி உழவு துறைக்கு முதலிடம் கொடுத்தார்கள்.

மேற்கே   திருவிதாங்கூர்,  கிழக்கே திருவாரூர், வடக்கே திருவேங்கடம், தெற்க்கே திருமதுரை வரை மன்னன் சேரன் தலைமையில் யாவரும் ஒன்று பட்டு திருப்புகழ், தேவார தெய்வ வழிபாடு பட்ட கவிஞர்களுடன் சிற்பிகள் ஒன்றினைந்து ரத, கஜ, துரக, பாதிகளைக் கொண்டு சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் கி.பி. ஆறாம் ஙூற்றாண்du அமைக்கப்பட்டது.
சேர மன்னனின் துணை கொண்டு நதிகளுக்கு கரைகளும், கற்களை கொண்டு அணைகள் கட்டினர்கள். காவிரி நதியை தாயாக கொண்டு கொங்கு நாட்டின் சேக்கிழார் வம்ச உழவர் பெருமக்கள் நான்கு லட்சம் பேர் திருவாரூரில் தியாகராஜேஸ்வர் ஆலயம் அமைய ஆவண செய்தார்கள். 

தொண்டியில் மூவேந்தர் சின்னத்துடன் அரிய கல்வெட்டு [Ref: Dinamalar அக்டோபர் 06,2008,00:00 IST] 

கரூர்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டியில் உள்ள குளம் நடுவில், மூவேந்தர் சின்னமான வில், புலி, மீன் மூன்றும் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை ஆட்சிபுரிந்த சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில், கி.பி., 1192ம் ஆண்டு தொண்டியில் இருந்த காளிகோவிலை, காளிகணத்தார் என்போர் நிர்வகித்தனர். அங்கு வாழ்ந்த உய்யவந்தான் சுந்தரன் ஆன வல்லப சமஞ்சிதனான பரசமய கோளரி என்பவரிடம் நிலம் வாங்கி ஊருக்குப் பொதுவாக குளம் வெட்டினர். அதற்கு, "காளிகணத்தான் குளம்' என்று பெயர் வைத்து காளி உருவத்தையும் பொறித்தனர். குளம் அமைத்ததைக் கூறும் கல்வெட்டில், மூவேந்தர் சின்னமான வில், புலி, மீன் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில், தொண்டிக்கு "பவித்திரமாணிக்கப் பட்டினம்' என்ற பெயர் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. பவித்திர மாணிக்கம் என்றால் "தூய்மையான மணி' என்று பொருள். அக்காலத்தில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த, செல்வ வளம் மிக்க காயல்பட்டினம், பெரியபட்டினம் போன்ற ஊர்களுக்கும் பவித்திரமாணிக்கப்பட்டினம் என்று பெயர் விளங்கியது. இந்த கல்வெட்டில் சேரர், சோழர் சின்னங்களும் பொறித்துள்ளதற்கு, சரித்திர ரீதியான காரணங்கள் உள்ளன. வீரபாண்டியனுக்கும், அவன் தாயாதியான விக்கிரம பாண்டியனுக்கும் அரசுரிமைப் போர் நடந்தது. வீரபாண்டியனுக்கு இலங்கை படைத்தலைவர்களான இலங்காபுரித் தண்டநாயகன், ஜகத்விஜயத் தண்டநாயகன் ஆதரவு தந்தனர்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் படைத்தலைவன் திருச்சிற்றம்பலம் உடையான் பெருமான் நம்பிப் பல்லவராயனும் விக்கிரமபாண்டியனுக்கு ஆதரவாகப் போரிட்டு வென்று, விக்கிரம பாண்டியனை அரியணையில் அமர்த்தினான். இலங்கைப் படைத்தலைவர்களின் தலைகள் மதுரைக்கோட்டையில் தொங்கவிடப்பட்டன. சேர நாடு சென்ற வீரபாண்டியன், சேரன் துணையோடு மூன்றாம் குலோத்துங்கனிடம் அடைக்கலம் புகுந்தான். தன் இரு மக்களுக்கும் வீரகேரளன், பரிதி குலபதி என்று சேரர், சோழர் பெயரை வைத்தான். "மூன்றாம் குலோத்துங்கன், வீரபாண்டியனைப் பாண்டிய நாட்டின் ஒரு பகுதிக்கு அரசன் ஆக்கினான். அதனால், தன்னை அரசனாக்கிய சோழர் சின்னத்தையும், உதவிய சேரர் சின்னத்தையும் தன் கல்வெட்டில் வீரபாண்டியன் பொறித்திருக்க வேண்டும்' என்று ஈரோடு கொங்கு ஆய்வு மைய ஆய்வாளர் புலவர் ராசு தெரிவித்தார்.

No comments:

Post a Comment