Thursday 27 July 2017

வெள்ளையத்தேவன் வரலாறு.

கலெக்டர் ஜாக்ஸன்துரை கடுங்கோபத்தில் இருந்தான். தன் படைபலம், ஆயுதபலம், அதிகார பலம் எல்லாம் தெரிந்தும்கூட வீரபாண்டியகட்டபொம்மன் “”வரி கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு வெளியேறுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதிரியின் கோட்டைக்கே வந்து கர்ஜித்துவிட்டுப் போகும் சிங்கத்தைச் சுட்டு வீழ்த்த ஆணையிட்டான்.
ஆனால், எதிர்த்தவர்களின் தலைகள் வெட்டுப்பட்டன.
துப்பாக்கி தூக்கி வந்த வீரர்கள் பலர் கட்டபொம்மனின் வாளுக்கு இரையானார்கள். தடைகளைத்தாண்டி கோட்டைக்கு வெளியே வந்தான் கட்டபொம்மன். லெப்டினட் கிளார்க் என்ற வெள்ளைக்காரன் கட்டபொம்மனின் மார்புக்கு நேராக துப்பாக்கியைப் பிடித்தபடி தடுத்தான்.

ஒரு நொடி தாமதித்திருந்தாலும் கட்டபொம்மனின் மார்பில் க்ளாக்கின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருக்கும். அந்த நொடியைக்கூட தாமதிக்க விடாமல், கட்டபொம்மனின் போர்படைத் தளபதி மாவீரன் வெள்ளையத்தேவன் க்ளார்க்கின் தலையை வெட்டினான். க்ளார்க்கின் தலையை கட்டபொம்மனின் காலுக்குக் கீழே விழச் செய்தான். சுற்றி நின்ற படைவீரர்கள் நடுங்கிப்போய்விட்டார்கள். வெள்ளையத்தேவனின் துணிச்சலைக் கண்டு “”என் உயிர் காத்த வெள்ளையத் தேவா?” என்ற கட்டபொம்மன் அவனை ஆரத் தழுவிக் கொண்டான். வீரன் வெள்ளையத் தேவன் மட்டும் அன்று அந்த துணிச்சலான முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், கட்டபொம்மன் உயிர் அன்றே போயிருக்கும். கட்டபொம்மனின் வரலாறு வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும்.
சேது நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இராமலிங்க விலாசம்கோட்டை வாயிலில்தான் இந்த வீரப்போர் நிகழ்ந்தது. இந்த சண்டையைத்தான் வீரத்தளபதி வெள்ளையத் தேவனின் வீரகாவியம் பேசும் சண்டையாகப் போற்றினார். நாட்டார் வரலாற்று அறிஞர்கள். “தலவாசல் சண்டை’ என்று கும்மிபாடினார்கள் நாட்டுப்புறமக்கள்
அந்த நன்றியை கட்டபொம்மன் மறக்கவில்லை. பாஞ்சாலங்குறிச்சியையே விழாக்கோலம் ஆக்கினான்.
வெள்ளையத்தேவனுக்காக மாபெரும் விழா ஒன்றை நடத்திக்காட்டினான். தனக்கு உயிர்ப்பிச்சை அளித்த வெள்ளையத்தேவனுக்கு “மை ஃபாதர்’ என்ற பட்டத்தைக் கொடுத்தான். “என் தந்தை வெள்ளையத்தேவன்’ என்று அழைத்தான். ஃபாதர் என்ற பட்டம்தான் பிற்காலத்தில் “பாதர் வெள்ளை’ என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், “பகதூர்’ என்ற பட்டம்தான் கொடுக்கப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.
யார் இந்த வெள்ளையத்தேவன்?
சேதுபதி சமஸ்தானத்திற்கு உட்பட்டது சாயல்குடி என்ற கிராமம். இதன் தலைவர் மங்களத்தேவர். சிற்றரசர்களுக்குரிய அத்தனை சிறப்பகளையும் வீரத்தையும் கொண்டவர். இவருடைய மகன்தான் வெள்ளையத்தேவன் என்கிறார்கள்.
எட்டயபுரம் மன்னர் தனக்கு அளித்து வந்த இன்னல்களைக் எடுத்துக் கூறி, கட்டபொம்மன் மங்களத்தேவரிடம் உதவி கேட்டு வந்தான். “உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்னாமல் உதவுவது நம் பண்பாடு’ என்ற நெறியில், அவருக்கு உதவ தன் மகன் வெள்ளையத்தேவனை அனுப்பியதாக ஒரு செய்தி கூறுகிறது. தந்தையின் ஆணைப்படி தனயன் வெள்ளையத் தேவன் கட்டபொம்மனுக்கு உதவ வந்ததாகவும், வந்த இடத்தில் வெள்ளையத்தேவனின் வீரம் கண்டு, அவனையே தன் படையில் தலைமைத் தளபதியாக நியமித்துக்கொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இன்னொரு கட்டுக் கதையும் உண்டு. சிறுவயதில் கட்டபொம்மன் தன் தந்தையுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனதாகவும் அங்கு கண்டெடுக்கப்பட்ட குழந்தையை அரண்மனையில் வைத்து வளர்த்ததாகவும், அக்குழந்தைதான் பிற்காலத்தில் வெள்ளையத்தேவனாக வளர்ந்து, படைத் தளபதி அளவிற்கு உயர்ந்ததாகவும் ஒரு கதை வழக்கில் உண்டு. அந்த செஞ்சோற்றுக் கடனுக்காகத்தான் இறுதிவரை கட்டபொம்மனோடு இருந்து வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்ததாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.
வெள்ளையத்தேவன் பிறப்பிலேயே வீரம் கொண்டவன். இளம் வயது முதல் வேல் சண்டையில் அதிக ஈடுபாடு கொண்டவன். அவன் போருக்குப் போகும் முன்சேவல்போர் நடத்துவானாம். அதில் அவன் சேவல் வெற்றி பெற்றால் போரில் வெள்ளையத்தேவனை யாராலும் வெல்ல முடியாது. எந்த போரிலும் தோற்காத அவனது சேவல் அன்று நடந்த சண்டையில் தோற்றதால்தான் வெள்ளையருக்கு எதிராக நடந்த போருக்குப் போகாவிடாமல் அவன் மனைவி வெள்ளையம்மாள் தடுத்திருக்கிறாள். “”போகாதே போகாதே என் கணவா…. பொல்லாத சொப்பனம் தானும் கண்டேன்” என்ற ஒப்பாரிப்பாடல் இடம் பெற்றுள்ள நாட்டார் பாடலில் இச்செய்தியுள்ளது. “பகதூர் வெள்ளை’ என்ற பெயரில் உள்ள நாட்டுப்பாடலிலும் இந்த ஒப்பாரிப்பாடல் உள்ளது.
தேசிங்கு ராஜனின் பஞ்சக் கல்யாணி குதிரை போன்றதுதான் வெள்ளையத்தேவனின் குதிரையும்.
“ஒட்டப்பிடாரம் வழிதனிலே, ஓடி வருதாம் பேயக்குதிரை…” என்று அந்தக் குதிரையின் வீரத்தைப் பேசாதவர்களே இல்லையாம்.
1799செப்டம்பர் 1-ஆம் தேதி. திருச்செந்தூரில் நடந்த ஆவணி மாதத் திருவிழாவிற்கு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் சென்ற சமயம். ஒற்றர்கள் மூலம் இதை அறிந்த கர்னல் பானர்மேன், பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டனர்.
பரங்கியர் படையோ பெரும்படை பீரங்கிகள், துப்பாக்கிப் படைகள், குதிரைப் படைகள் என்று ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து குவித்திருந்தான் ஆங்கிலேயன். பாஞ்சாலங்குறிச்சியில் இருந்ததோ மரபு ரீதியான ஆயுதம் தாங்கிய ஆயிரம் வீரர்கள்.என்றாலும் அஞ்சவில்லை தமிழ்ச்சிங்கங்கள். காரணம் அதற்குத் தலைமை தாங்கியது தலைமைத் தளபதி வெள்ளையத் தேவன். எதிரிகள் படையை அவன் தாக்கியதைக் கண்டு பரங்கியர் பயந்துபின்வாங்கினார்கள். பீரங்கிக்குண்டுகளிடமிருந்து கோட்டையைக் காக்க வெள்ளையத்தேவன் பட்ட பாட்டை எழுத்தில் எழுதமுடியாதாம். நூற்றுக்கணக்கான துப்பாக்கி வீரர்கள் அவன் மார்பை குறிவைத்தார்கள்.
ஆனால், எதிரிகளின் குண்டுகள் அவன் மார்பில் பாய்ந்தபோதும் விடாமல் தொடர்ந்து எதிரிகளை அவன் வாளுக்கு இரையாக்கிக்கொண்டே வந்தான்.
செய்தி கேள்விப்பட்டு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வந்ததை அறிந்தான். அதுவரை மார்பிலே குண்டுகளைத் தாங்கி, குத்தப்பட்ட வேலையும் பொருட்படுத்தாது பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் பத்திரமாக ஒப்படைத்தான். அடுத்தநொடி அந்தப் போர்க்களத்திலேயே வீரமரணம் எய்தினான் வெள்ளையத்தேவன்.
துப்பாக்கிக் குண்டுகளை முத்தமிட்டபோதும் இறுதிவரை மானத்தை இழக்காமல் மரணம் தொட்ட மாவீரன் வெள்ளையத்தேவன் பற்றிய வரலாறு அதிகம் எழுதாமல் போனது ஏனோ?

சேற்றில் முளைத்தவனா வெள்ளையத்தேவன் ?

உள்ளே புகுமுன், முதலில் புரட்டையும், புனைவுக் கதையையும் பார்ப்போம்.
“அடர்ந்த மரங்கள், அணியணியாகச் செழித்திருந்தது ஒரு காடு. அங்கு சேரும் சகதியும் நிறைந்த ஒரு பள்ளத்தில் ஒரு சிறு குழந்தை சிக்கி இருந்தது. அன்றைய தினம் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் அந்தப் பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். குரைத்துக் கொண்டு ஓடிய வேட்டை நாயைப் பின் தொடர்ந்து சென்றான். சேற்றில் குழந்தையைக் கண்டான். அந்தக் குழந்தையை கண்டு வாரி அழைத்துக் கொண்டான். திரும்பினான் அரண்மனை.
“காட்டில் கண்டிபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று அரண்மனையில் வளர்ந்து வருகிறது என்பது தெரிந்து குழந்தையின் பெற்றோர்கள் மன்னருடன் விவரம் சொல்லி குழந்தையை தரும்படியாக வேண்டினர். மறுத்துவிட்டான் மன்னன். பிள்ளை பாசம் பெற்றவர்களுக்கு அல்ல, வளர்த்தவனுக்கு. பயனில்லாததால் திரும்பிவிட்டனர் பெற்றோர்கள்”
குழந்தை யார்?
ஒரு நாள் மங்களத்தேவர் அவர்களின் மனைவி விறகு வெட்டுவதற்காக காட்டிற்குப் புறப்பட்டார். போகும் போது தமது கைக்குழந்தையையும் எடுத்துச் சென்றார்.  ஒரு மரத்தடியில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு காட்டிற்குள் சென்றுவிட்டாள். போனவள் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இருட்டிவிட்டது. தூங்கி எழுந்த குழந்தை தாயைக் காணாது தவழ்ந்து சென்று அந்தச் சேற்றில் சிக்கிக் கொண்டது.

வீட்டுக்கு வந்த தமது மனைவியை பார்த்து குழந்தை எங்கே? என்று கேட்டாராம் மங்களத்தேவர். பதறிப்போய் தாய் தேடிப் புறப்பட்டாள். மற்றும் சிலரும் தொடர்ந்து காடு சென்றனர். கிடைக்கவில்லை. அந்தக் குழந்தை தான் அரண்மனையில் வளர்ந்து வருகிற வெள்ளையத்தேவனாகும் .
இது தான் அந்தக் கட்டுக்கதை. பொய்ப் புரட்டு.
மறக்குலத் தாய்மார்களுக்கு களங்கத்தை உண்டாக்கியுள்ளனர்.  தாய்மார்கள் தன்னுயிரைக்கூட இழக்கத் துணிவர். ஆனால்…..! தமது குழந்தையை வினாடியும் விட்டுப் பிரியாதவர்கள். விறகு வெட்டப் போனவள் குழந்தையை மறந்து விட்டு வந்துவிட்டாள் என்பது தாய்க்குலத் துரோகச்செயலாகும். அடுத்து காட்டுக்கு வேட்டையாட வந்த கட்டபொம்மன் குழந்தையைக் கண்டு எடுத்து வந்து வளர்த்தான்.
படைத்தலைவனாக்கினான். அவன் தான் வெள்ளையத்தேவன். உண்ட கடனுக்காக உயிர் கொடுத்தான். செஞ்சோற்றுக் கடன் தீர்த்தான் என்று மறக்குல மாண்புக்கு மீது அழியாப் பழி சுமத்தியுள்ளனர்.
என்றாலும்…… தவறு யாருடையது?
மறக்குல மக்களே அடிச்சுவடுகூடத் தெரியாது, புரியாது அவல நிலையில் இருக்கின்றனரே.  வரலாறு எழுதுபவர்களாவது உண்மை நிகழ்ச்சிகளை ஒதுக்கித் தள்ளிவிடாது முறையானவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது தான் வரலாறு ஆகும். தவறினால் திறனாய்வு இல்லாத புரட்டர்கள் என்ற களங்கம் ஏற்பட்டுவிடும்.

கட்டபொம்மு நாயக்கர் பிறந்தது 03-01-1760
பட்டம் ஏற்றுக் கொண்டது 02-02-1790
அவன் தூக்குக்கயிற்றில் தொங்கியது 16-10-1799
மொத்தம் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி தான்.

02-02-1790ல் பட்டம் ஏற்றவன் வேட்டையாட காட்டிற்குப் போகிறான். கண்டெடுத்தான் ஒரு குழந்தையை. பொடி நடை பயிலும் வயது. சண்டை துவங்கியது. 1798 ல் இந்த ஒன்பது ஆண்டு காலத்திற்குள்ளாக வளர்ந்து வில், வாள் பயின்று வீரனாக படை நடத்தும் தலைவனாக ஆகிவிட்டான் என்றால்…..! மந்திர வித்தையா?
அவனுக்கு வெள்ளையம்மாளைத்   திருமணம் செய்திருக்க முடியுமோ? கற்பனைக்குக் கூட எட்டாத ஒன்றை கதையாக தீட்டிவிட்டனர். கதையும் அல்ல. களங்கத்தை உண்டாக்க வேண்டும் என்று தீட்டிய புரட்டு, புனைந்துரையாகும்.
வெள்ளையத்தேவன்?
முத்தமிழ் நாடாம் வித்தகர் போற்றிப் புரக்கும் செந்தமிழ்நாடு சேதுபதி சீமை. அதன் அணிகலனாக உள்ள சிறு கிராமம் சாயல்குடி. அதன் அருகே மங்கம்மாள் சாலை இருந்ததால் சாலைகுடி என்று பெயர் இருந்தது. வசதிகள் நிறைந்த இடமாக இருந்தது. மேலும் பல தியாக வீரர்களை விளைவித்த நிலம், பின்னால் அது சாயல்குடி என்ற பெயராகி விட்டது.
அந்த சாயல்குடியில் வாழ்ந்து வந்த பெரியார் மங்களத்தேவர் அவர்கள். மக்கட் பண்புடன் வாழ்ந்த அவர் குறுநில மன்னரின் சிறப்புக்குரியவராகவும் இருந்தார். அவரது திருமகன் தான் வெள்ளையத் தேவன். சேற்றில் கண்டெடுத்தவன் அல்ல. சேது நாட்டின் செந்தமிழ் செல்வனே ஆகும்.
இளமையில் அவன் மறக்குல மாண்புடன் வில், வாள். ஈட்டி முதலிய வீர விளையாட்டுகளில் வல்லவனாக விளங்கினான். அவனது துணையாக இருந்தவர்கள் கட்டகருப்பணன், சுந்தரலிங்கம் என்ற இரு தாழ்த்தப்பட்ட (அரிசன)  இன வீரர்கள். இணைபிரியாத தோழர்களாவர்.
இந்த நிலையில்,ஒருநாள் கட்ரா, கட்டப்பிரமையா என்ற கம்பளத்து நாயக்கர் வாரிசு, வீரபண்டியாபுரம் கட்டபொம்மு நாயக்கர் சாயல்குடி வந்தான். மங்களத்தேவர் அவர்களைக் கண்டான். எட்டயபுரம் அரசர் தமக்குச் செய்துவரும். தொல்லைகளையும், அதனால் தாம் அடைந்த இன்னல்களையும் எடுத்துக் கூறினான். ஆதரவு தந்துதவ வேண்டினார் தேவர் அவர்களிடம்.
“வெள்ளையத்தேவா….  !
வந்திருப்பவர் வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கர் நம்மிடம் உதவி வேண்டி வந்திருக்கிறார். வந்திருப்பவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. எனவே, நீ உடன் சென்று அவருக்கு உறுதுணையாக இருந்து வெற்றி கொண்டு வா. உனக்குத் துணையாக உனது நண்பர்கள் கட்டக்கருப்பணன், சுந்தரலிங்கம் இருவரையும் வேண்டிய ஆட்களையும் கூட்டிச் செல்க” என்றார்.
தந்தை ஆணைப்படி தனையன் வெள்ளையத் தேவன் புறப்பட்டான். வீரபண்டியாபுரம் கட்டபொம்மு நாயக்கரும் வந்து சேர்ந்தான்.
வெள்ளையத்தேவன் கட்டபொம்முவுக்கு உதவிக்கு வந்ததை அறிந்த எட்டயபுரம் அரசர் திசை திருப்பப்பட்டது. தென் நாட்டில் வந்த வெள்ளையர்களுக்கு ஆதரவு கொடுத்தார். எப்படியும் தனக்கு துரோகம் செய்த கட்டபொம்முவை ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தாரே தவிர, எட்டயபுரம் அரசர் குமார முத்து எட்டப்பர் துரோகியல்ல. துரோகிகளை ஒழிக்க முன் வந்தவர்.
தமிழ்க் கலை வளர்த்தவர். பல தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர். உமறுப் புலவர் போன்றோர்களை வளர்த்தவர். உறுதுணையானவர் தான் எட்டயபுரம் அரசர். எட்டயபுரம் மகாக்கவி பாரதியார் பிறந்த இடமல்லவா? தமிழ் வளர்த்த வள்ளல் எட்டப்பர் துரோகியாக்கப்பட்டார்.  தமிழனைக் காட்டிக் கொடுத்தும், கொள்ளை அடித்தும், கிட்டி போட்டு வசூல் செய்தவன் வீரானாகிவிட்டான் (கட்டபொம்மன்). அவனை வீரானாக்கிய பெருமை தமிழ் மண்ணுக்குத்  (ம.போ.சிக்கு) தான் உண்டு.
ஆதியில் எட்டயபுரம் அரசருக்கு உரிமையாக இருந்தது செக்காரக்குடி கிராமம். அங்குள்ள வேளாளர்கள் செழிப்பாக இருந்து வந்தனர். அவர்களை அடக்க எண்ணினார் எட்டயபுரத்தார். அப்பொழுது (எட்டயபுரத்தார்க்கு) தமது அடைப்பக்காரனாக இருந்தவன் தான் கட்ரா கட்டப்பிரமையா. அவனது வாரிசுதாரர் கருத்தையா என்ற கட்டபொம்முவை செக்காரக்குடி அனுப்பினார்.  வேளாளர்களை அடக்கியவன், தானே அங்கு பொறுப்பேற்றுக் கொண்டு எட்டயபுரத்தார்க்கு எதிரியாகிவிட்டான்.
அடுத்திருந்தது  வீரபாண்டியபுரம். அங்கு சென்றான். வீரபாண்டிய மன்னனிடம் அடைக்க்கலாம ஆனான். பணியிலும் அமர்ந்து கொண்டான். அவன் வாரிசு இன்றி காலமானதால், அவனுக்கு செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை நிறைவேற்றியவன். தானே வீரபாண்டியபுரம் அரசர் என்று பட்டமும் சூடிக்கொண்டான். எனவே வீரபாண்டியபுரம் அரசராக கட்டபொம்மன் ஆகிவிட்டானே தவிர பாண்டியன் அல்ல, பாண்டியன் மரபினனும் அல்ல.
எனவே, தஞ்சமென்று தந்தையிடம் அடைக்கலம் புகுந்த, வீரபண்டியபுரம் கட்டபொம்மனுக்கு அஞ்சேல் என ஆதரவு கொடுத்து தமது உயிரையும் தியாகம் செய்த மறத்தமிழ் மாவீரன் வெள்ளையத்தேவனே தவிர, செஞ்சோற்றுக்காக பிள்ளை புகுந்தவன் அல்ல. தாய்க்குலத்திற்கு துரோகம் செய்பவர் மறவர் மக்கள் அல்ல என்பதை நாடே அறியும்.

வேலுநாச்சியார் (1730)

வடநாட்டில் ஜான்சி ராணி தோன்ற, ஒரு நூற்றாண்டு காலம் முன்பே தமிழகத்தில் தோன்றி, வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார்.
கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறி மடியும் வழக்கமுள்ள ஒரு காலக் கட்டத்தில், தன் கணவர் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரைக் கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து நின்று போரிட்டுப் பழிதீர்த்ததுடன், வெற்றியும் பெற்றுச் சுதந்திரதேவி போல் அரசாண்ட இந்தத் தமிழரசி.

வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
ஆங்கிலேயர் படையெடுப்பு
1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு, வெள்ளையர்களை விவேகத்துடன் எதிர்த்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்களுடன், வேலுநாச்சியாரே போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.


படை திரட்டல்

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். நாச்சியார் தொடர்ந்து பூஜை செய்ய உத்தரவிட்டார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருதுபெரிய மருது, வேலுநாச்சியார் அவர்கள் தரைலமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.
வேலு நாச்சியார் கைப்பற்றிய தமது நாட்டிற்கு பெரிய மருதுவை தளபதியாகவும், சின்னமருதுவை அமைச்சராகவும்த நியமித்தார். வேலுநாச்சியார் மகள் வெள்ளச்சிக்கும் சக்கந்தி வேங்கண் தேவருக்கும் திருமணம் செய்து வைத்தார். 1780-1789 வரை ஆட்சியில் இருந்தார். 1789-ல் மருமகனுக்கு ஆட்சிப்பொறுப்பை மாற்றிக் கொடுத்தார்.


இறுதி நாட்கள்

1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் வம்சாவழிப்பட்டியல் கீழே உள்ளது.

சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்

1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 - 1789 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1790 - 1793 - இளவரசி வெள்ளச்சி நாச்சியார் - ராணி வேலு நாச்சியாரின் ஒரே மகள்
5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையணத்தேவர் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரின் கணவர்
6. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
7. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்
8. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்
9. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்
10. 1048 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்
11. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
12. 1877 - முத்துவடுகநாதத்தேவர்
13. 1878 - 1883 - துரைசிங்கராஜா
14. 1883 - 1898 - து. உடையணராஜா
15. 1898 - 1941 - தி. துரைசிங்கராஜா
16. 1941 - 1963 - து. சண்முகராஜா
17. 1963 - 1985 - து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா

18. 1986 - முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார். 

சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் செப்பேடுகள் (வேலு நாச்சியார்)


“அரிமான் இடித்தன்ன, அஞ்சிலை வல்வில் புரிநான், புடையி

புற்ங்கண்டல் அல்லால் இனைபடை தானை
அரசரோடு உறினும் கனைதொடை நாணும்,
கடுந்தொடி ஆர்ப்பின் எருத்து வலிய எறுழ்
நோக்கு இரலை மருப்பின் திருந்து
மறிந்துவீழ் தாடி உருத்த கடுஞ்சினத்து
ஓடா மறவர் பொருள் கொண்டு
புன்செயின் அல்லதை அன்போடு அருள்
புறம் மாறிய ஆரிடை அத்தம்.–”கடுங்கோ சேரமான்”.பொருள்:
சேனையணிகள் சூழ,அரசனே பெரும்படையுடன் வந்தாலும் அஞ்ச மாட்டர்கள்.சிலை மரத்தால் செய்த வலிமை மிகுந்த வில்லை வளைந்து அதிலே முறுக்கமைந்த நாண் கயிற்றைப் பூட்டுவர், அவர் மீது கணைதொடுப்பது தம் வீரத்துக்கு தகுதியற்றது என்று வெட்கம் கொண்டு நாணை தெறித்து ஒலி எழுப்புவர். சிங்கக் குரலைக் கேட்டு விலங்கினம் சிதறி ஓடுவதுபோல் அவ்வொலிகேட்டே அரசரோடு வந்த பெரும் படையினரும் பின் முதுகுகாட்டி ஓடுவர். அத்தகைய கொடிய ஆற்றல்கொண்டவர்,பாலை நில காட்டிலே வாழும் மறவர்கள். அவர்கள் ஆராவாரமாக வருவது கடிய துடியின் ஒலியோடு கேட்கும். வன்மைகொண்ட பார்வையும் வலி மிகுந்த கழுத்தும் உடைய கலைமானின் கொம்புகலைப் போல,அவர்களது மீசை முறுக்கொண்டு திருகித் தாழ்ந்து தொங்கும். வெம்மையான கொடுஞ்சினம் உடைய அவர்கள் செய்யும் தொழிலே தனி வகையானது. வழியில் வருபவர்களை தாக்கி அவர்களுக்கு புண்களை பரிசாக தரும் வெம்மையுடைய பாலை நிலத்தவரின் கொடிய காட்டு வழி இது. இதில் சென்று பொருள் தேடி மீள என்னுகின்றாய்.
பாடியது யார்? சேரமன்னன் “பாலை பாடிய கடுங்கோன்”.ஏனெனில் சேரனும் மறமன்னனே.
இன்னோர் சங்க பாடல்களில் பாலை நில காட்டில் தூங்கும் மறவனின் காலானது. வேட்டையாடிய சிங்கத்தின் காலைபோன்றது என புகழப்படுகின்றது.
பாண்டியன் பட்டமான கௌரியர் என்ற பட்டத்தை காலம் காலமாக சூடி வருபவர்கள் சிவகங்கை மன்னர்கள். இந்த பட்டம் வேறு எவரிடமும் கிடையாது. பாண்டிய நாடும் சேதுத்துறையும் கௌரியருக்கு உரியது என சங்ககாலம் செப்பும்.
சிவகங்கையை ஸ்தாபித்தது சசிவர்ணத்தேவர் என வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்க்கு முன்பே பார்த்திபனூர் அருகே அருங்குளத்திலிருந்து சிவகங்கை நாலுக்கோட்டை நெடுக மதுரை அருகே உள்ள பழையனூர் வரை பரந்து அமைந்த ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்த உடையார் கௌரி வல்லபத் தேவர்கள் ஆண்டிருந்தனர் என்ற நிருபத்தின் ஆதாரமாக திருப்புவனம் அருகே உள்ள பழையனூர் கோவிலில் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.
நாலுகோட்டைப் பாளையக்காரரான பெரிய உடையார் தேவர் அந்தப் பகுதியிலேயே மிகப் பெரும் வீரராக திகழ்ந்தார் மேலும் கடமை உனர்வுடன் இராஜ விசுவாசத்துடனும்,சேதுபதிக்கு உறுதுனையாக இருந்த செயல் மறவராவார்.
அவருக்கு மூன்று மனைவியர் இருந்தனர். முதல் மனைவியை பற்றி விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை. இந்த முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் சசிவர்ணத்தேவர். இவர்களுடன் பிறந்தவர்களான திரியம்பகத்தேவரும்,லவலோசனத்தேவரும் சிறுவயதிலே இறந்துவிட்டதாக கருதப்படுகின்றது. இரண்டாவது மனைவி இராமநாதபுரத்தை சார்ந்த பெரும் போர் மறவரான சங்கரத்தேவரின் மகள் சிந்தாமனி நாச்சியார் இவர் தம் தந்தை போலவே வாள் சண்டையிலும்,சிலம்பு விளையாட்டுகளிலும் வல்லவர்.
பெரிய உடையாத் தேவர் இராஜாங்க காரியமாக அடிக்கடி இராமநாதபுரம் சென்று வருவார். அப்போது சிந்தாமனி நாச்சியாரின் வீர விளையாட்டுகளைப்பார்க்க நேர்ந்தது. நாச்சியாரின் பேராற்றலை கண்டு மனதை பறிகொடுத்து நாலுக்கோட்டையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
சிந்தாமனி நாச்சியார் மூலம் பிறந்தவர்கள் இருவர். ஒருவர் செல்வ ரகுநாததேவர்,மற்றொருவர் சேது பந்தன நாச்சியார். செல்வ ரகுநாத தேவர் நாலுகோட்டைப் பாளையத்திலே தங்கிவிட்டார். அங்கிருந்து கொண்டு சேதுபதிகளுக்கு உதவியாக இருந்தவர்(பிற்க்கால முத்துவடுகநாத தேவர் சிவகங்கையின் இரண்டாவது அரசராக முடிசூட்டிக் கொண்டபோது,நிர்வாகத்தில் அவருக்கு உதவியாக இருந்தார்).
சிந்தாமனி நாச்சியார் தனக்கு பிறந்த மக்களை விட சசிவர்ணத்தேவரிடம் மிகுந்த பாசமும் பற்றும் வைத்து இருந்தார். பெரிய உடையனத்தேவரின் மூன்றாவது மனைவியான கோவனூர் நாச்சியாருக்கு பூவுலகத்தேவர் என்னும் மகன் இருந்தார்.
பெரிய உடையனத்தேவரின் குமாரர்களில் அழகிலும் ஆற்றலிலும் சசிவர்ந்த்தேவர் உயர்ந்து விலங்கினார்.
அவரது வீரப்பராக்கிரமங்களைக் கேள்விப்பட்ட விஜய ரகுநாத சேதுபதி சசிவரனத் தேவருக்கு தன் மகள் அகிலாண்டேஸ்வரியை திருமனம் செய்து வைத்தார்.
இத்திருமணத்திற்க்கு பின், தன் சம்பந்தியின் நிலையை உயர்த்த விரும்பினார். அதற்காக முன்னூறு போர் வீரர்களை வைத்துக் கொண்டிருந்த பெரிய உடைய தேவருக்கு,ஆயிரம் போர் வீரர்களை வைத்துக் கொள்ள அனுமதியளித்தார் மேலும் அவர்களுக்கான செலவுகளை ஈடு செய்து கொள்ளத் தேவையான வருவாயுள்ள
நிலப்பகுதியை அளித்தார். சசிவர்னத்தேவரின் திருமனத்துக்கு பின் நோய்வாய் பட்ட பெரிய உடையத்தேவர் பெரிய உடையனத்தேவரின் மரனம் சேது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பலவீனம் ஆனது. இவரது இறுதி சடங்குகள் நாலுக்கோட்டை அருகிள் உள்ள கந்தமாதனப் பொய்கையில் நடந்தது. சந்தனக் கட்டைகளால் அடுக்கப்பட்ட சிதையில் சிந்தாமனி நாச்சியார் தன் கனவருடன் தீப்பாய்ந்து மாண்டார்.
சசிவர்ணத்தேவரின் செப்பேடுகள் கீழே
சிவகங்கை அரசர்களின் திருநாமங்களாக செப்பேட்டில்:
——————————————————————————————–
——————————————————————————————–
கவுரி வல்லபத் தேவர்
குளந்தை நகராதிபன்
அரசு நிலையிட்டான்
சசிவர்ணத் தேவர்
முத்து விஜய ரகுநாதன்
பெரிய உடையார்
இந்துகுல சர்ப்ப கருடன்(சந்திரகுல சரப்பபக்ஷி[DRAGON])
அனுமக் கொடி கருடக்கொடி மகரக்கொடி புலிக்கொடி
சிங்கக் கொடி யாளிக்கொடியுடையோன்
பாண்டிய தேசத்தில் பொதியமாமலையான்
வைகையாருடையான்
புனல் பரளை நாடன்
கரந்தை நகராதிபன்
முத்து வடுக நாதன்
மும்மதயானையன்
பஞ்சகால பயங்கரன்
பஞ்சகதி புரவியுடையான்
அரசு ராவணவத ராமன்






















ஏன் பாளையக்காரர் தோற்றனர் ?




சிவகங்கைச்சீமை வரலாறு பற்றி என்னுடைய பழைய குறிப்புகளைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது சில விஷயங்கள் தென்பட்டன. அவற்றைப் பார்த்தபோது ரொம்பவும் வியப்பாக இருந்தது.
18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி(கும்பினி) தமிழ்நாட்டில் தன்னுடைய போர் நடவடிக்கைகளை அதிகரித்திருக்கிறது. அப்போதுதான் பாளையக்காரர்களை அடக்கும் போர்கள் ஆரம்பித்தன.
அப்போது ஆர்க்காட்டு நவாபின் ஆட்சி நடந்தது. அதெல்லாம் பேரளவுக்குத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆர்க்காட்டு அரசாட்சிப் போட்டி ரொம்பவும் பலமாக நடந்துவந்தது.
எழுபத்திரண்டு பாளையங்கள் மதுரைநாட்டில் மட்டுமே இருந்தன. இவைபோக சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய அரசுகளும் இருந்தன. ராமநாதபுரம் அரசு இருபதினாயிரம் ஆட்கள் கொண்ட படையை விரைவாகத் திரட்டும் அளவுக்கு இருந்தது. தேவைப்பட்டால் இன்னும் அதிக எண்ணிக்கையைச் சேர்க்கமுடிந்தது. சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய இரண்டும் சேர்ந்திருந்த காலத்தில்கிழவன் சேதுபதி ஆட்சியில் ஆறே மணி நேரத்தில் இருபதினாயிரம் மறவர்களைத் திரட்ட முடிந்திருக்கிறது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களில் சிலரும் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களில் சிலரும் டச்சுக்காரர்கள் முதலியோரை வைத்து மேற்கத்திய நாட்டுப் படைகளின் கவாத்து முறைகளிலும் போர் முறைகளிலும் ஆயுதங்கள் பயன்படுத்துவதிலும் பயிற்சிகொடுக்கப் பட்டிருந்தன.
அவர்களிடம் Standing Army எனப்படும் நிலைப்படை இருந்தது. சில தமிழ்ப்படங்களில் காட்டப்படுவதுபோல ‘வீரவேல், வெற்றிவேல்’ என்று கத்திக்கொண்டு வேல்க்கம்பு அரிவாளுடன் எப்போதும் ஓடவில்லை. அவர்களிடம் தக்க ஆயுதங்கள் இருந்தன. அவ்வப்போது தேவைக்கேற்ப ஆங்காங்கு மக்களையும் திரட்டிக்கொண்டு போரில் அவர்களையும் ஈடுபடுத்தினர்.
மற்றபடிக்கு அவர்களிடமும் பீரங்கிகள், துப்பாக்கிகள் போன்றவை இருந்தன. அவற்றை வைத்தும் போரிட்டனர. மொத்தம் ஆயிரக்கணக்கையும் தாண்டி லட்சக்கணக்கில் பாளையப்பட்டுக்கள், அரசுகள் முதலியவற்றிடம் போர்வீரர்கள் இருந்திருக்கின்றனர்.
மிலிட்டரி ஆர்க்கைவ்ஸிருந்து திரட்டிய விபரப்படி 1793-ஆம் ஆண்டு கும்பினியாரின் மெட்ராஸ் படையில் பத்தாயிரம் வெள்ளைக் காரர்களும் முப்பதாயிரம் இந்தியர்களும் இருந்தனர். அதன்பின்னர் பாளையக்காரர் புரட்சி வந்தபோது 1798-இல் பதினோராயிரத்து முன்னூறு வெள்ளையர், முப்பத்தாறாயிரத்து ஐந்நூறு இந்தியர்களாகக் கூட்டினர்.
மாவீரன் பூலித்தேவன (1715 – 1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில்`வெள்ளையனே வெளியேறு’என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
அப்போதுதான் நெற்கட்டான் செவல் முதல் போர் நடந்தது. அது 1767 -இல் முடிந்தது. ஆனால் மருது சேர்வைக்காரர்கள் கூட்டணி தொடர்ந்து போரிட்டது. ஆகவே கும்பினி தன்னுடைய படைகளை இன்னும் பலப்படுத்தியது. 1801-இல் புரட்சி ஒடுங்கியது.
1805-ஆம் பதின்மூன்றாயிரம் வெள்ளையர்கள் அறுபத்தொன்பதாயிரம் இந்தியர்கள் கொண்ட படை கும்பினியில் இருந்தது.
இவர்கள் எல்லாரையும் சேர்த்தாலும்கூட ஒரு லட்சத்தைத் தொடவில்லை. ஆனால் லட்சக்கணக்கான எண்ணிக்கை கொண்ட படைகளைத் திரட்டக்கூடிய பாளையக்காரர் தோற்றனர்.